சிலியில் தொடரும் போராட்டம்.. கைவரிசை காட்டும் கொள்ளையர்கள்

இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாடு, அண்மையில் மெட்ரோ ரெயில் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இதனை கண்டிக்கும் வகையில், சிலி தேசத்து மக்கள் கடந்த சில நாட்களுகு முன் போராட்டத்தில் இறங்கினர்.


சிலி தலைநகர் சாண்டியாகோ மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பெருநகரங்கள் மற்றும் டால்கா, டெமுகோ மற்றும் பூண்டா அரினாஸ் ஆகிய முக்கிய நகரங்களில் போராட்டக் காரர்கள் எதிர்பாராத விதமாக வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

இதற்குப் பிறகு, அசாதாரண சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட நகரங்களில் உடனடியாக அவசர நிலை அமலுக்கு வந்தது. இத்துடன் போராட்டத்தை கட்டுப்படுத்த , மெட்ரோ ரெயில் கட்டணத்தின் உயர்வை ரத்து செய்வோம் என்றும் சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்திருந்தார். எனினும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து போராடி வருகின்றனர்


இந்நிலையில், சாண்டியாகோ நகரில் அமைந்து உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததில் 4 உயிர்கள் பலியாயின. மேலும் சாண்டியாகோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டக் காரர்கள் மற்றும் போலீசார் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இந்த கலவரத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் கடைகள் மற்றும் தொழிற் சாலைகளைச் சூறையாடி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சிறிய வணிகர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த வரிசையில், நேற்று முன் தினம் (அக். 20) இரவு நேரத்தில், ஒரு அரசு ஜவுளி தொழிற்சாலைக்குள் கொள்ளையர்கள் ப்குந்து, அங்கிருந்து பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்ததுடன், தொழிற்சாலைக்கு நெருப்பு வைத்து கொளுத்திவிட்டுச் சென்றனர்.