இந்தியாவில் வாகனங்கள் இடதுபுறம் செல்வதற்கான பின்னணி தெரியுமா..?

வாகனங்கள் சாலையில் பயணிக்கும் நடைமுறை எவ்வாறு வகுக்கப்பட்டது? எதற்காக ஓவ்வொரு நாட்டிற்குமான வாகன இயக்கம் மாறுபடுகிறது என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.


இந்தியாவில் இடதுபுறமாக வாகனங்கள் செல்வதற்கான நடைமுறை பின்பற்றப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளில் வலதுபுறத்தில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.


சாலையில் வாகனங்கங்கள் செல்வதற்கான நடைமுறை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டாலும், அதனுடைய பயன்பாடு என்பது ஒன்றுபடுகிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்த போது, பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

பிரிட்டன் காலனி ஆதிகத்தில் இந்தியா இருந்த போது, வாகனங்களுக்கான சாலை பயன்பாடு இடது புறமாக மாறியது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வருவது. ஆனால் சாலை பயன்பாட்டை பிரிட்டன் எப்படி இடதுப்புறத்தில் அமைக்க முடிவு செய்தது என்பது தான் கேட்கப்பட வேண்டிய கேள்வி.


உலகின் இடைக்கால வரலாறு மிகவும் வன்முறையாக காலக்கட்டமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் போர், சண்டை, கொலை, கொள்ளை என்று அரங்கேறிக் கொண்டிருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளுக்கு ஏற்பட்டது.

அப்போது குதிரைகளில் செல்லும் போர் வீரர்களுக்கு அபாயம் நிறைந்திருந்தது. இதனால் அவர்கள் கவச உடையிலும், கையில் வில் அம்பு ஏந்தியும், இடுப்பில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடனும் விதி உலா வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

போர் வீரர்கள் அனைவரும் வலது கையை பயன்படுத்துபவர்களாக இருந்தனர். இதனால் தங்களுடைய உடை வாளை அவர்கள் இடது புறமாக வைத்திருந்தனர். எதிரே எதிரிகள் யாராவது வந்தால் உடனே கையில் எடுத்து வாள் வீசுவதற்கு இடதுபுறம் ஏற்புடையதாக இருந்தது.