மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி நீதிமன்ற வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ். தலைமையில் ஏராளமான தொண்டர்கள் வாலாஜா சாலை வழியாக பேரணியாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.