அம்மா உணவகம்

னைத்த மாத்திரத்தில் ஹோட்டல்களுக்கு சென்று குடும்பத்துடன் விருந்து உண்ணும் வசதி படைத்தவர்கள் உள்ள நம் நாட்டில் தான், தினமும் மூன்று வேளை சாப்பிட முடியாத ஏழைகளும் இன்னமும் இருக்கின்றனர்.

இவர்களை கருத்தில் கொண்டே, 2013 ஆம் ஆண்டு , தமது பிறந்த நாளில் (பிப்ரவரி 24), "அம்மா உணவகத்தை" அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் தொடங்கி வைத்தார்.


சென்னை மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் இத்திட்டத்தின்கீழ், மலிவு விலையில் தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சியில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்துக்கு சாமானியர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில், 'அம்மா உணவகம்' திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் கர்நாடகம், ஆந்திரம் தொடங்கி டெல்லி வரை செயல்படுத்தப்படும் அளவுக்கு இத்திட்டம், தேசிய அளவில் முன்மாதிரி திட்டமாக விளங்குகிற