திருவனந்தபுரம்:
கேரளாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது
சீனாவில் உண்டான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே டில்லியில் 6 பேர், மஹாராஷ்டிராவில் 11 பேர், கர்நாடகாவில் 5 பேர், உ.பி.,யில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு, காஷ்மீர், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மொத்தமாக இந்தியாவில் பாதிக்கப்பட்ட 81 நபர்களில், 17 பேர் வெளிநாட்டவர்கள். அவர்களில் இத்தாலியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 16பேர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்.